புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் புலியூரில் இருந்து களரிப்பட்டி, உறவிக்காடு, செட்டிப்பட்டி வழியாக திருவெறும்பூரை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.