கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி சோமசுந்தரம் சாலை குண்டும், குழியுமாக மண் சாலையாக உள்ளது. இதனால் சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.