அரியலூர் நகரில் வரதராஜ பெருமாள் கோவில் கோவிலுக்கு செல்லும் பாதையில் தனியார் வங்கிகள் மற்றும் கடைகள், வீடுகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இந்த சாலையில் நடுவே மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், சாலையின் கீழே பாதாள சாக்கடை அமைந்துள்ளதாலும் சாலை பெயர்ந்து உள்வாங்கியுள்ளது. இதனால் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கும் வகையில் இந்த குழியினுள் மரக்கட்டைகளையும், சாக்குப்பையையும் அப்பகுதியினர் போட்டு வைத்துள்ளனர். இருப்பினும் விபத்து அபாயம் அதிகரித்து தான் உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் குழியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.