சேறும், சகதியுமான சாலை

Update: 2024-09-15 07:56 GMT

பேரூர் தாலுகா கலிக்கநாயக்கன்பாளையம் சி.பி.சி. கார்டன் பேஸ்-3 குடியிருப்பு பகுதியில் தார்சாலை இல்லை. மண்சாலை மட்டுமே உள்ளது. அதுவும் மழை பெய்துவிட்டால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடிவது இல்லை. நடந்து சென்றாலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் விரைவாக தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்