வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலை கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. அப்போது சாலையின் நடுவே தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் பூச்செடிகள் நட்டு வைக்கப்பட்டன. இந்த நிலையில் அவசரகதியில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அந்த தடுப்புகளில் வாகனங்களை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் பூச்செடிகள் சேதமடைவதுடன், சாலையை கடக்க முயல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையின் நடுவே இரும்பு வேலி அமைக்க வேண்டும்.