கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அல்லூர் பழைய பாலத்தில் இருந்து சென்னை- கும்பகோணம் செல்லும் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?