ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெரு, இக்பால் தெரு உள்பட 15-வார்டுகளிலும் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் உள்ளது. மேலும் சாலையும் சீரமைக்கப்படாமல் காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.