சேதமடைந்த சாலை

Update: 2024-09-08 09:45 GMT

 மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளவிளாகம் பகுதியில் இருந்து முழங்குவிளை, எள்ளுவிளை பகுதி வழியாக முள்ளிறங்கி பகுதிவரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சென்று வருகின்றனர். ஆனால், இந்த சாலையை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜிகுமார், செம்மான்விளை.

மேலும் செய்திகள்