உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பட்டு கிராமத்தில் இருந்து பெரும்பாக்கத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை மேலும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?