எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த வழியாக புதுக்கோட்டை மற்றும் காளிசெட்டிபட்டியில் இருந்து மாணவ, மாணவிகள் பொட்டிரெட்டிப்பட்டியில் செயல்படும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விமல், நாமக்கல்.