அரியலூர் மாவட்டம் அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை செல்லும் சாலையில் தினந்தோறும் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. இரு வழிச்சாலையாகவும், மேலும் ஆங்காங்கே சாலையில் குண்டும், குழியுமாகவும் உள்ளதால் தினந்தோறும் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.