வேப்பூர் கூட்டுரோட்டில் சேலம்- விருத்தாசலம் சந்திப்பில் பாலத்தையொட்டி உள்ள சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.