கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீரில் அடித்து வரப்பட்டு மண் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவில் அதிக விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அங்கு விபத்துகளை தடுக்க குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.