புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டை முத்துராஜா தெருவில் இருந்து கீரனூர் விளக்கு சாலை வரை உள்ள இரண்டு கிலோமீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.