அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் பிரிவு பாதை முதல் மு.புத்தூர் சுண்ணாம்புக்கல் சுரங்கம் நுழைவாயில் வரை அதிகளவில் விபத்து நிகழும் 7 இடங்களில் கடந்த ஆண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அந்த வேகத்தடைகளில் இந்த நாள் வரை வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் வெள்ளை நிற பட்டைகளும், சிகப்பு நிற பிரதி பலிப்பான்கள் அமைக்கவில்லை. சாலையும் வேகத்தடைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் வெளியூரில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுவதால் அதிகளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.