விபத்து அபாயம்

Update: 2024-07-21 16:40 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றது. இதேபோல் நகரின் பிரதான பகுதியான வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகராட்சி பள்ளி முன்பு சாலையில் கம்பி ஒன்று நீட்டிக் கொண்டுள்ளது. மேலும் அதில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் வாகனங்கள் செல்லும்போது அதில் உள்ள கம்பி டயரில் குத்தி பஞ்சாராகும் நிலை தினமும் உள்ளது. மேலும் சிலர் அந்த இடத்தில் நிலை தடுமாறி விழும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்