செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலபாக்கம் கிராமம் வள்ளுவர் நகர் முதல் தெருவில் மண் சாலை உள்ளது. அந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வெளியே செல்லும் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் சாலையை, தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.