செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் பஜனை கோவில் தெருவில் மண்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அந்த மண் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அந்த பகுதியில் தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.