செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆதனூர், காஞ்சி காமாட்சி நகரில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், பள்ளிக்குழந்தைகள், வயதானோர் இந்த பகுதி வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.