அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள துளார் கிராமத்திற்கும், மணக்குடையான் கிராமத்திற்கு இடையே 2 கிலோ மீட்டர் தொலைவில் தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.