பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல மெட்டல் சாலை அமைக்கப்பட்ட இருந்தது. இந்த சாலையை அகற்றிவிட்டு புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மெட்டல் சாலையை தார் சாலையாக மாற்றினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.