பெரம்பலூர்-துறையூர் சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் சாலை அகலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சாலை அகலப்படுத்தப்பட்ட பிறகு இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், டி.களத்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.