திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருப்பூர் கிராமம், காடப்பிச்சம்பட்டி பகவதி அம்மன் கோவில் செல்லும் சாலை கடந்த ஏழு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.