மங்கலம்பேட்டை 3-வது வார்டு மக்கள் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.