குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-05-26 10:27 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது