சேதமடைந்த சாலை

Update: 2024-05-12 16:11 GMT
  • whatsapp icon

தர்மபுரி கடைவீதி பகுதியில் இருந்து செல்லும் சாலை ஆத்துமேடு வழியாக ராஜா பேட்டை, செட்டிக்கரை ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள் கார்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த தார்ச்சாலை ஆத்துமேடு பகுதியில் ஜல்லிகற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்