கடையத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் இடைகால் அருகில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சாலையோரம் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள், சாலை ஓரங்களில் சிதறி கிடக்கிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.