சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-21 17:32 GMT
விருத்தாசலத்தில் உள்ள சாலைகளை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலையும் குறுகியதாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட அனைவரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்