தகவல் பலகை வைக்கப்படுமா?

Update: 2024-04-14 17:04 GMT
சின்னசேலம் இந்திரா நகரில் இருந்து பாண்டியன் குப்பம் கிராமம் வரை தார் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணி நடைபெறுவது குறித்த தகவல் பலகை அங்கு வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி