மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா குடிச்சேரி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த தரைப்பாலம் வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. சேதமடைந்த தரைப்பாலம் வழியாக பயணிப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?