விருத்தாசலம் அருகே புதுக்கூரப்பேட்டையில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் புறவழிச்சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?