சென்னை தரமணி, காந்தி குறுக்கு தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆனால் இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெயர் இல்லை. இதனால் அந்த பகுதிக்கு புதிதாக வருபவர்கள் விலாசம் தெரியாமல் அலைந்து திரியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே , சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.