சென்னை பனையூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. குழாய் அமைக்கும் பணி முடிந்த நிலையில் சாலையில் உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்படமால் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.