கூடலூர் 1-ம் மைல் பகுதியில் இருந்து செம்பாலாவுக்கு செல்லும் தார்சாலை பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.