பழுதாகும் வாகனங்கள்

Update: 2024-03-31 10:33 GMT

கூடலூர் அருகே தொரப்பள்ளி முதல் நடுவட்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையானது பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது