புழுதி பறக்கும் சாலை

Update: 2024-03-24 11:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கச்சேரி வீதி பஸ்நிலைய சாலை குண்டும், குழியுமாக இருந்த நிலையில் அங்கு புதிய சாலை அமைப்பதற்காக கிரஷர் துகள்களால் பள்ளங்களை நிரப்பி உள்ளனர். அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் கிரஷர் துகள்களால் புழுதி கிளம்பி வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதி வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது