கோபிசெட்டிபாளையம்-ஈரோடு மெயின் ரோட்டில் 4 வழிச்சாலைக்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையம் முன்புறம், பாரியூர் பிரிவு, ராஜ வீதி போன்ற பல இடங்களில் சாலையின் நடுவில் ‘யு' டர்ன் செய்யும் பகுதிகளில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் இருந்து காலூன்ற முடியாமல் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் உடனே சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?