அரியலூர் மாவட்டம் செந்துறை காந்தி நகர் விரிவு படுத்தபட்ட குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிறிதளவு மழை பெய்தாலும் மண் பாதையானது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மழைபெய்யும்போது இந்த பாதையின் வழியாக நடந்து கூட செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.