அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை அமைக்கப்பட்டுள்ள சாலை குறுகலாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்லும்போது சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விக்கிரமங்கலம்- குருவாடி சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.