சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி ரோடு மிகவும் மோசமாக காணப்படுகிறது. குண்டும்-குழியுமாக உள்ளது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?