அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் இருந்து காலனித்தெரு வழியாக அரியலூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் தாலுகா அலுவலகம் வரும் ஊழியர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.