தாளவாடியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் தினமும் பள்ளி வாகனங்கள், காய்கறி வாகனங்கள், இருசக்கரவாகனங்கள், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பஸ் நிலையம் அருகே உள்ள சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். உடனே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.