கோவை குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாயக்கன்பாளையம் அருகே விஜயா நகர், நடராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தார் சாலை வசதி இல்லை. ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் உப்பு தண்ணீர் சீராக வினியோகிக்கப்படுவது இல்லை. குப்பைகளையும் முறையாக அகற்றுவது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.