நெல்லை அருகே நடுக்கல்லூரில் தென்காசி மெயின் ரோடு, சேரன்மாதேவி மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது. அதில் வாகனங்கள் செல்லாதவாறு கம்பு ஊன்றி எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். எனினும் இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.