அரியலூர் மாவட்டம், பருக்கலில் இருந்து தத்தனூர் வரை செல்லும் தார் சாலையானது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.