கோவை சிங்காநல்லூர் அருகே விளாங்குறிச்சி சாலையானது அங்குள்ள வங்கி அருகே பெயர்ந்து குழி ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். அதுவும், இரவு நேரத்தில் அதிக விபத்துகள் நடக்கிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.