கோபியில் வாசு லே அவுட் நகரில் 4 ரோடு சந்திப்பு உள்ளது. இங்கிருந்து கோபிக்கு செல்லும் இடத்தில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு தளம் அமைக்கப்பட்டது. இதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளன. தார் போடவில்லை. சரியாக மூடப்படாமல் உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோட்டை சரியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.