அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் இருந்து வி.கைகாட்டி செல்லும் சாலையில் அம்பலர் கட்டளை வரை ஏற்கனவே உள்ள சாலையின் மீது மேலும் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பக்கம் சாலைபோடப்பட்டும் இன்னொரு பக்கம் போடப்படாமல் இருப்பதால் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் மேடு பள்ளங்களில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.