சென்னை மாதவரம், கோபால்சாமி நகரில் உள்ள மாத்தூர் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக சாலை மற்றும் மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் கிராமமே இருளில் சூழ்ந்து விடுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் சாலை மற்றும் மின்விளக்கு வசதிகளை உடனே அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.