குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-04 12:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து திருமணஞ்சேரி வழியாக ஆவணம் கைகாட்டி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பாதசாரிகளின் கால்களையும் பதம் பார்க்கும் இந்த மோசமான சாலையால் அந்த வழியாக செல்லும் அரசு மற்றும் மினி பஸ்கள் சரியாக இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இச்சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது